சென்னை: சைபர் கிரைம் போலீஸ் என மிரட்டி ரூ. 16 லட்சம் மோசடி - ஒருவர் கைது

10 hours ago 2

சென்னை,

சென்னை கொளத்தூர், விவேகானந்தன் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராஜ்குமார். இவர் ஆட்டோமொபைல் கடை நடத்தி வருகிறார். கடந்த 16-ம் தேதி இவருக்கு போன் அழைப்பு ஒன்று வந்தது. அதில் எதிர்முனையில் பேசிய நபர், டெல்லி சைபர் கிரைம் தலைமையகத்திலிருந்து பேசுகிறோம். உங்கள் மீது போதைப்பொருள் கடந்தல் தொடர்பாக புகார் வந்துள்ளது. எனவே நீங்கள் உடனடியா டெல்லியில் ஆஜராக வேண்டும் அதுவரை உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம்.

இதனைக்கேட்ட ராஜ்குமார் அதிர்ச்சியடைந்தார். மேலும் உங்கள் மீது தவறு இல்லை என்றால் அதை நிரூபிக்க உங்கள் வங்கி கணக்கிலுள்ள பணம் முழுவதையும் நாங்கள் கூறும் வங்கி கணக்குக்கு அனுப்பி வையுங்கள் என மிரட்டினார். இல்லை என்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனால் பயந்துபோன ராஜ்குமார். தனது வங்கி கணக்கிலிருந்த ரூ 16 லட்சத்து 50 ஆயிரத்தை அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தார். அதன்பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜ்குமார் சென்னை மேற்கு மண்ட சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மோசடி கும்பலுக்கு உடந்தையாக இருந்த தூத்துக்குடி மாவட்டம், சிதம்பரம் நகரைச் சேர்ந்த ஆனந்த குமார் என்பவரை கைது செய்தனர்.

Read Entire Article