சென்னை செயல்படும் அனைத்து மகளிர் விடுதிகளை நவம்பர் 15-க்குள் பதிவு செய்யவேண்டும்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

1 month ago 8

சென்னை: சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவற்றை வரும் நவம்பர் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். முறையாக பதிவு செய்யாத விடுதி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து ₹50,000 அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015 ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவுசெய்யப்படாத விடுதிகள் பதிவு செய்வதற்கு http://tnswp.com இணையதள போர்டல் மூலமாக பதிவு செய்யலாம்.

இப்பதிவு மேற்கொள்ள அறக்கட்டளை பதிவு பத்திரம், FORM D- License சொந்த கட்டடம்/ வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச்சான்று, தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று, காவல்துறையின் சரிபார்ப்பு சான்று (Warden & Security). FSSAI 2 , IT& Audit Statement மற்றும் சுகாதாரதுறைத்சான்று ஆகிய சான்றுகளுடன் http://tnswp.com இணையதள போர்டல் மூலமாக வருகிற நவம்பர் 15 ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்பதிவு குறித்து சந்தேகங்களுக்கு DSWO CUG 9150056800 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு முறையாக பதிவு செய்யப்படாத தனியர் விடுதி மற்றும்

இணைநிர்வாகிகள் மீது சட்டப்படி காவல்துறை மூலமாக வழக்குபதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் ) அபராதம் விதிக்கப்படும் என்ற விவரம் சென்னை மாவட்டத்தில் செயல்படும் மகளிர் விடுதிகளுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

The post சென்னை செயல்படும் அனைத்து மகளிர் விடுதிகளை நவம்பர் 15-க்குள் பதிவு செய்யவேண்டும்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article