சென்னை: பயணிகளின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம் சாலிமர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் தேவை அடிப்படையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து. இயக்கப்படும் காலம் நீட்டிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் - மேற்குவங்க மாநிலம் சாலிமர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.