சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் ரயில் சேவையை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் ரயில்களில் நாள்தோறும் 1000 கணக்கானோர் பயணித்து வருகின்றனர். இந்த ரயில்கள் மாணவர்கள் அலுவலக பணியாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பினரின் முக்கிய போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்கின்றன. ஆனால் கடந்த மாதம் முதல் இந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் குறைக்கப்பட்டதால் அணைத்து தரப்பினரும் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
சரக்கு ரயில்கள் விரைவு ரயில்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். அதிபட்டு- கும்முடிபூண்டி இடையே 4 வழி தடமாக மாற்றிடவும் கூடுதல் ரயில்கள் இயக்கவும் தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்றும் எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார். சென்னை – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பயணிகளின் கோரிக்கை ஏற்று கூடுதல் மின்சார ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே தீர்வு காணுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
The post சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில்சேவை குறைப்பு: கூடுதல் மின்சார ரயில்களை இயக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.