"சென்னை, கன்னியாகுமரி அருகே ஆழ்கடலில் எரிவாயு எடுக்க அனுமதி அளிப்பதா?" - ராமதாசு எதிர்ப்பு

8 hours ago 2

சென்னை: சென்னை, கன்னியாகுமரி அருகே ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'தமிழ்நாட்டில் கன்னியாகுமரியை அடுத்த ஆழ்கடல் பகுதியில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே ஓரிடத்திலும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டங்களால் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் சீர்கெடும் என்று வல்லுநர்கள் எச்சரித்து வரும் நிலையில், அதை மீறி அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

Read Entire Article