பாகிஸ்தானுக்கு நீர் மட்டுமல்ல காற்றை கூட கொடுக்கக்கூடாது: மதுரை ஆதீனம் பேட்டி

6 hours ago 2

மதுரை: பாகிஸ்தானுக்கு நீரை மட்டுமல்ல. காற்றை கூட கொடுக்கக்கூடாது என மதுரை ஆதீனம் தெரிவித்தார். மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீன மடத்தில் தனியார் மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கு விலையில்லா ரத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் உடல் எடை, ரத்த பரிசோதனை செய்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இன்றைக்கு மத தீவிரவாதத்தில் ஈடுபடுவது பாகிஸ்தான். அதனை தூண்டி விடுவது சீனா தான். பாரத நாடு என்றைக்கும் சமாதானத்தை தான் விரும்புகிறது. ஆனால் தூங்குகின்ற புலியை இடரிவிட்டால் ஏற்படும் விளைவை பாகிஸ்தான் கட்டாயம் அனுபவிக்கும். இன்றைக்கு உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்குத்தான் ஆதரவாக நிற்கிறது.

தீவிரவாதத்திற்கு எதிராக நதிநீரை நிறுத்துவது சரியானதுதான். அவர்களுக்கு தண்ணீரை வழங்கக் கூடாது. யார் கூறினாலும் சரி. மனிதாபிமானத்தின்படி தண்ணீர் தருவது சரிதான். ஆனால் அவர்களுக்கு மனிதாபிமானம் இல்லை. அவர்கள், இந்தியர்களை சுட்டு வீழ்த்துகிறார்கள். பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி வழங்க வேண்டும். காற்றை கூட அவர்களுக்கு கொடுக்கக் கூடாது. வாஜ்பாய் ஆட்சியின்போது கொடுத்த பதிலடியை போன்று இந்தமுறையும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும். நடிகரும், தவெக தலைவருமான விஜய்யை பற்றி பேச விரும்பவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.

The post பாகிஸ்தானுக்கு நீர் மட்டுமல்ல காற்றை கூட கொடுக்கக்கூடாது: மதுரை ஆதீனம் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article