உ.பியில் 10 மதரசாக்கள் மூடல்

7 hours ago 2

ஷ்ரவஸ்தி: உத்தரபிரதேசத்தில் அங்கீகாரமின்றி இயங்கி வந்த 10 மதரசாக்கள் மூடப்பட்டன.

இதுகுறித்து உத்தரபிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தி மாவட்ட சிறுபான்மை நல அதிகாரி தேவேந்திர ராம் அளித்த பேட்டியில், “ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் மொத்தம் 297 மதரசாக்கள் உள்ளன. இதில் 192 மதரசாக்கள் அங்கீகரிக்கப்படாதவை என கண்டறியப்பட்டது. அதன்படி நேபாள எல்லையில் இருந்து 15கிமீ தொலைவில் இந்திய பகுதியில் 10 மதரசாக்கள் வாடகை வீடுகளில் அல்லது கட்டி முடிக்கப்படாத கட்டிடங்களில் மறைமுகமாக செயல்பட்டு வந்தன. இந்த 10 மதரசாகள் முறைகேடுகளில் ஈடுபட்டதால் மூடப்பட்டன. ஷ்ரவஸ்தி மாவட்ட ஆட்சியர் அஜய் குமார் திவேதியின் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் இயங்கும் சட்டவிரோத, அங்கீகரிக்கப்படாத மதரசாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

The post உ.பியில் 10 மதரசாக்கள் மூடல் appeared first on Dinakaran.

Read Entire Article