சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய ஜோடிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்

2 hours ago 1

சென்னை,

சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் இதன் இரட்டையர் பிரிவில் முதலாவது சுற்றில் இந்தியாவின் ராம்குமார்- சகெத் மைனெனி ஜோடி , கிமெர் கோப்ஜன்ஸ் (பெல்ஜியம்)- கிர்கின் (இத்தாலி) இணையுடன் மோதியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-3, 6-1 என்ற நேர் செட்டில் ராம்குமார்- சகெத் மைனெனி ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது

இதே போல் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்- விஜய் சுந்தர் பிரசாந்த் கூட்டணி 6-3, 3-6, 13-11 என்ற செட் கணக்கில் சக நாட்டவர்களான சிராக் துஹான்- தேவ் ஜாவியா இணையை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

Read Entire Article