சென்னை- ஐதராபாத் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

2 hours ago 1

சென்னை,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 38 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் குஜராத், டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

நடப்பு தொடரில் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் சென்னை அணி 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் படுதோல்வி கண்ட சென்னை அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 25ம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. சேப்பாக்கத்தில் நடக்கும் 5-வது ஆட்டம் இதுவாகும். இந்நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது. காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுகொள்ளலாம்.

ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Read Entire Article