சென்னை ஊர்க்காவல் படையில் துணை மண்டல தளபதி பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2 hours ago 1

சென்னை,

சென்னை மாநகரக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் துணை மண்டல தளபதி (Deputy Azen Commanders பதவிகளுக்கு இளமையும், ஊக்கமும் அர்ப்பணிப்பு மற்றும் தலைமை பண்புடைய விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், உயர் பதவி வகிப்பவர்கள் சுயதொழில் புரிபவர்கள் உயர்தகுதி வாய்ந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் பொது நலத்தொண்டில் ஈடுபாடு கொண்ட சேவை செய்ய விருப்பம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியானது கவுரவ பதவியாகும் (Honorary Poet) மேலும் இப்பணிக்கு எவ்வித ஊக்கத் தொகையும் வழங்கப்படமாட்டாது.

கீழ்காணும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்:-

1. குற்றப்பின்னனி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும்

2. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

3. குடும்ப அட்டை (Ration Cant) வைத்திருக்க வேண்டும்.

4. 01.07.2025 அன்று 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாகவும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.

மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பம் கடிதத்துடன் சுயவிபரங்கள் அடங்கிய (Curriculum Vitae) படிவத்தை இணைத்து கீழ்காணும் முகவரிக்கு 30.07.2025 மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது [email protected] எனும் e-mail முகவரியிலும் அனுப்பலாம்.

முகவரி:-

சென்னை பெருநகர ஊர்காவல்படை அலுவலகம்,

சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம் சைதாப்பேட்டை சென்னை-15

தொலைபேசி எண்: 95667 76222. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article