
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த மாதம் 23ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து இதே வழக்கில் கடந்த 26ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட 2 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து இருவரும் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நேற்று விசாரித்த கோர்ட்டு, ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஐகோர்ட்டு ஜாமீன் நேற்று வழங்கிய நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரும் இன்று புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். ஐகோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கிய நிலையில் அதற்கான உத்தரவு இன்று சிறைக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.