
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், 4 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவர் துணை ராணுவத்தில் பணியாற்றும் பாதுகாபுப்படை வீரர் என்பது தெரியவந்தது. 36 வயதான ரோகித் குமார் என்ற நபர் பாதுகாப்புப்படையின் சாஸ்த்ரா சீமா பால் படைப்பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். அவர் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்துள்ளார். அதேபோல், கல்லூரி லேப் டெக்னீசியனும் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்துள்ளார். மேலும், 2 பேர் உள்பட மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள 600 கிராம் போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.