சென்னை அருகே ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளை போதையில் தாக்கிய கும்பல் கைது

2 months ago 9
திருவள்ளூர் மாவட்டம் இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் போதையில் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் சிறுவன் உள்பட மூன்று பேரை ஆவடி ரயில்வே போலீசார் கைது செய்தனர்.  திங்கட்கிழமை மாலை ரயில் நிலையத்திற்கு வந்த 4 பேர் கும்பல் இரும்பு ராடு, டியூப் லைட் உள்ளிட்டவற்றால் நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகளை சரமாரியாக தாக்கியதில் 54 வயதான மின்வாரிய ஊழியர் பரமசிவம் என்பவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. போதையில் இருந்த சுபாஷ், இப்ராஹிம் மற்றும் ஒரு சிறுவனை கைது செய்ததாகவும், தலைமறைவான ஒருவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article