சென்ட்ரல் கோபுர கட்டுமானத்திற்கு ரூ350 கோடி மதிப்பில் ஒப்பந்தம்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

2 weeks ago 2

திருவொற்றியூர்: சென்ட்ரல் கோபுரத்தின் மேம்பாட்டிற்கான கட்டுமானம், கட்டிடக்கலை, மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள் போன்ற பணிகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் போன்ற பணிகளுக்கு ரூ349.99 கோடியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் கோபுரம் உலகளாவிய பெருநகரமாகவும், பன்முக போக்குவரத்து மையமாகவும் மாறுவதை குறிக்கும் ஒரு முக்கியமான திட்டமாகும். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் அமையவுள்ள இந்த 27 மாடி கட்டிடம் தொடர்புகள், தற்போதைய வசதிகள் மற்றும் நிலையான பராமரிப்பு முறைகள் அனைத்தையும் இணைக்கும் வகையில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சென்ட்ரல் கோபுரம், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்கள், ஆற்றல் திறன்மிக்க அமைப்புகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கியது, நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கான முன்னோடியாக அமைந்துள்ளது. சென்ட்ரல் கோபுரம் ஒரு முக்கியமான செயல்பாட்டு மையமாக கருதப்படுகிறது. வணிகம், ஓய்வு மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றுக்கு கவனமாக வடிவமைக்கப்பட்ட இடங்களை வழங்கும் இந்த கோபுரம், குடியிருப்பாளர்கள், பயணிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வருகை தரும் பார்வையாளர்களுக்கு ஒரு இணக்கமான சூழலை உருவாக்கும். அதன் அதிநவீன உள்கட்டமைப்பு நகரத்தின் இணைப்பு, பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சென்ட்ரல் கோபுரம், வளர்ச்சி, புதுமை மற்றும் வாய்ப்புகளை குறிக்கிறது.

இது நகரத்தின் லட்சியத்தையும் மாற்றத்தையும் குறிக்கும் ஒரு பெருமைமிக்க அடையாளமாக திகழ்கிறது. மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் இணைந்து உருவாக்கிய சிறப்பு நோக்கத்திற்கான நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம், பிரபலமான சென்னை சென்ட்ரல் கோபுரத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் ரெனாடஸ் பிராஜெக்ஸ் பிரைவேட் நிறுவனத்திற்கு ரூ349.99 கோடியில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் கடந்த மாதம் 12ம் தேதி வழங்கப்பட்டது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில், அர்ச்சுனன் மற்றும் ரெனாடஸ் பிராஜெக்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மனோஜ் பூசப்பன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

The post சென்ட்ரல் கோபுர கட்டுமானத்திற்கு ரூ350 கோடி மதிப்பில் ஒப்பந்தம்: மெட்ரோ நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article