திருவேங்கடம் அருகே சிறுவன் விஷம் குடித்து தற்கொலை

4 hours ago 5

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அடுத்துள்ள தெற்கு பாறைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். கூலி தொழிலாளி. இவருடைய மகன் அஜித்குமார் (16 வயது), 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு பின்னர் பள்ளிக்கு செல்லவில்லை. தொடர்ந்து அஜித்குமார் வேலைக்கும் செல்லாமல் நண்பருடன் சேர்ந்து ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. இதனை தந்தை விஜயகுமார் கண்டித்தார்.

இதனால் மனமுடைந்த அஜித்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை திருவேங்கடம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Read Entire Article