
கோலாலம்பூர்,
மொத்தம் ரூ.4 கோடி பரிசுத் தொகைக்கான மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று முதல் 25-ந் தேதி வரை நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் தரவரிசையில் 35-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரனாய் தனது சவாலை ஜப்பானின் கென்டா நிஷிமோடோவுடன் தொடங்குகிறார்.
மற்ற இந்திய வீரர்கள் சதீஷ் கருணாகரன், டென்மார்க்கின் அன்டோன்செனையும், ஆயுஷ் ஷெட்டி, கனடாவின் பிரையங் யங்கையும், பிரியான்ஷூ ரஜாவத், சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜாசன் டெக்கையும் எதிர்கொள்கின்றனர். தகுதி சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சங்கர் முத்துசாமி, தருண் மன்னிபல்லி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பானின் நட்சுகி நிதாரியாவுடன் மோதுகிறார். மற்ற இந்திய வீராங்கனைகள் மாள்விகா பான்சோத், சீன தைபேயின் சியு பின் சியானையும், உன்னதி ஹூடா, சீன தைபேயின் லின் ஹியாங் டியையும், ஆகார்ஷி காஷ்யப், இந்தோனேசியாவின் புத்ரி சுமாவையும் சந்திக்கின்றனர். தகுதி சுற்றில் அன்மோல் கார்ப், தஸ்னிம் மிர் ஆகியோர் கால் பதிக்கின்றனர்.