செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பழவேலி பகுதி ஜிஎஸ்டி சாலையில், திருச்சியில் இருந்து சென்னை செல்லும் மார்க்கத்தில் நேற்று அதிகாலை மதுரையில் இருந்து காலி பீர்பாட்டில்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. இதேப்போன்று, சத்தியமங்கலத்தில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வாழைப்பழ தார்களை இறக்குவதற்காக மற்றொரு லாரி வந்து கொண்டிருந்தது.
இதில், காலி பீர்பாட்டில் ஏற்றி வந்த டிரைவர் கண்ணன், செங்கல்பட்டு அருகே பழவேலி பகுதி ஓட்டலில் சாப்பிடுவதற்காக சாலையோரத்தில் லாரியை ஓரங்கட்ட முயற்சித்துள்ளார். அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து வாழைப்பழ தார் ஏற்றி வந்த டிரைவர் சந்தோஷ் கண் அசந்ததால் சந்தோஷின் கட்டுப்பாட்டை இழந்ததால் காலி பீர்பாட்டில் ஏற்றிவந்த லாரியின்மீது வேகமாக மோதியது.
இதில், சாலையோர பள்ளத்தில் உருண்டு லாரிகள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இதில், மற்றொரு லாரியில் வாழைப்பழத் தார்கள் நசுங்கி சேதமாகின. கண்ணன் ஓட்டிவந்த லாரியில் இருந்த காலி பீர்பாட்டில்கள் சாலையில் உருண்டு உடைந்து சிதறின. இந்த விபத்தில் லாரிகளை ஓட்டிவந்த டிரைவர்கள் கண்ணன், சந்தோஷ் ஆகிய 2 பேரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து வந்தனர். அங்கு சாலையோர பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்த 2 லாரிகளையும் கிரேன் உதவியால் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
The post செங்கல்பட்டு அருகே சாலையில் கவிழ்ந்த லாரிகள் appeared first on Dinakaran.