மதுரை: நடிகர் விஜய் தேர்தலில் போட்டியிட்டு நிரூபித்தால் அவருடன் கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என விஜயபிரபாகரன் கூறியுள்ளார். மாமன்னர் திருமலை நாயக்கரின் 442வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது சிலைக்கு தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, தன்னை அரசியலில் யார் என்பதை நிரூபிக்க வேண்டும். விஜயகாந்த் 2005ல் கட்சியை தொடங்கி தேர்தலில் நின்று 12 சதவீத வாக்குகளை பெற்றார். அதன் பின்னரே அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். விஜயகாந்தை போல விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும்.
தேர்தலில் நின்று விஜய் அண்ணா, தன்னை யார் என்பதை நிரூபித்த பின்னரே அவரோடு கூட்டணி வைப்பதா, இல்லையா என முடிவு செய்வோம். அதிமுகவுடன் தான் தற்போது கூட்டணியில் இருக்கிறோம். எதிர்காலத்தில் கூட்டணி எப்படி அமையும் என கூற முடியாது. தேர்தலுக்கு முன்னர் எதுவும் மாறலாம். சூழலுக்கு ஏற்றவாறு எங்களின் நிலைப்பாடு மாறும். ெபாதுச்செயலாளர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன். இவ்வாறு தெரிவித்தார்.
The post சூழலுக்கு ஏற்ப எங்கள் நிலைப்பாடு மாறும் முதலில் தேர்தலில் போட்டியிட்டு விஜய் தன்னை நிரூபிக்கட்டும்: சொல்கிறார் விஜய பிரபாகரன் appeared first on Dinakaran.