புதுச்சேரி, பிப். 12: புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர். புதுச்சேரியில் சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கும் நிதி வழங்காததை கண்டித்து தட்டாஞ்சாவடி ஆதி திராவிட நலத்துறை இயக்குனர் அலுவலகத்தை பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்களுடன் நேற்று முற்றுகையிட்டனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணை செயலாளர் உமா, துணைத் தலைவர் சத்யா தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்ற மாணவிகள், ஆதிதிராவிட நலத்துறைக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்டனர். அங்கு வந்த துறை அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து முற்றுகையை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
The post ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகை appeared first on Dinakaran.