சூளகிரி : சூளகிரி சுற்றுவட்டாரங்களில் முள்ளங்கி விளைச்சல் அதிகரித்து, விலை சரிந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரணப்பள்ளி, தேவஸ்தானப்பள்ளி, பெல்லட்டி, சாமனப்பள்ளி, அத்திமுகம், ஒமதேப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரங்களில் விவசாயிகள் முள்ளங்கியை அதிகம் சாகுபடி செய்துள்ளனர். தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது. இந்த முள்ளங்கிகளை நேற்று முதல் விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.
தற்போது 30 கிலோ மூட்டை ரூ.50 முதல் ரூ.100 வரை சரிந்துள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘சூளகிரி வட்டாரத்தில் முள்ளங்கி விளைச்சல் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. ஆனால், விலை எதிர்பார்த்தபடி இல்லை.
கடந்த மாதம் 30 கிலோ எடை கொண்ட முள்ளங்கி மூட்டை ரூ.150 மற்றும் ரூ.200க்கும் விற்பனையானது. ஆனால், தற்போது ரூ.50க்கு விற்பனையாகிறது. இதனால் உரிய விலை கிடைக்காமல் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம்,’ என்றனர்.
The post சூளகிரி பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் முள்ளங்கி விலை சரிவு appeared first on Dinakaran.