சூலூரில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

4 months ago 16

 

சூலூர், ஜன. 11: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கலங்கல் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து காசிகவுண்டன்புதூர் ரேஷன் கடை உட்பட பல்வேறு ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன், பொருளாளர் வடிவேல், கலங்கல் கிளை செயலாளர் சிவகுமார், அன்பழகன், தொழிற்சங்க துணை அமைப்பாளர் செல்வம், முத்துக்குமார், நாகராஜ், ரமேஷ், காசிகவுண்டன்புதூர் கிளை செயலாளர் சிவசாமி, மணி, குருசாமி, தெற்கு ஒன்றிய ஐடி விங் அமைப்பாளர் லோகேஷ், மகளிரணி வளர்மதி, அனுசுயா, திமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post சூலூரில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article