
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சூர்யா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாக உள்ளது.
மேலும் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் சூர்யாவின் 46-வது படத்தை 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இருவரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.