சூர்யாவின் "ரெட்ரோ" டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

1 day ago 8

சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. முன்னதாக டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் காமிக்ஸ் வடிவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இப்படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படத்திற்கான பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ரெட்ரோ படத்தின் டிரெய்லர், இசை வெளியீட்டு விழா வருகிற 18-ந் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Happy Tamil New Year and Vishu wishes to All. #Retro Trailer & Audio from 18th April. #TheOne#LoveLaughterWar#RetroFromMay1 pic.twitter.com/QUvEHvmwzL

— karthik subbaraj (@karthiksubbaraj) April 14, 2025
Read Entire Article