
வாஷிங்டன்,
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் வோலூசியா நகரைச் சேர்ந்த பெண் கிம்பர்லி ஷாப்பர் (வயது 52). இவர் அங்குள்ள ஆரஞ்சு நகரில் பழங்கால பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அங்கு மனித எலும்புகளும் விற்கப்படுவதாக சமூக வலைதளத்தில் அவர் விளம்பரம் செய்தார்.
இது தொடர்பான புகாரின்பேரில் போலீசார் அங்கு சென்றனர். பின்னர் நடைபெற்ற சோதனையில் மண்டை ஓடு, முதுகெலும்பு உள்ளிட்ட மனித எலும்புகள் சட்ட விரோதமாக அங்கு விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே கிம்பர்லீயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.