அமெரிக்காவின் 'போயிங்' விமானங்களுக்கு சீனா தடை

5 hours ago 2

பீஜிங்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தமது நாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக உலக நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்தார். குறிப்பாக இந்தியாவுக்கு 27 சதவீதம், சீனாவுக்கு 104 சதவீதம் என அதிரடி காட்டினார். இந்த பரஸ்பர வரிவிதிப்புக்கு உலகநாடுகளிடையே கடும் கண்டனம் எழுந்தது.

இதனால் சீனா தவிர மற்ற நாடுகளுக்கு வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இதற்கு பதிலடியாக அமெரிக்காவுக்கு 125 சதவீதம் பரஸ்பர வரியை சீனா விதித்தது. இதற்கு போட்டியாக 145 சதவீதம் வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். இத்தகைய சூழலால் இருநாடுகளிடையே வர்த்தகப் போர் மூளும் அபாயம் நிலவுகிறது.

இந்த நிலையில் அமெரிக்க நாட்டின் விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்'கிடம் இருந்து விமானங்கள் வாங்க தமது விமான நிறுவனங்களுக்கு சீன அரசாங்கம் தடை விதித்துள்ளது. மேலும் விமானம் தொடர்பான எந்த கருவிகளையும் அமெரிக்காவிடமிருந்து வாங்க வேண்டாம் எனவும் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது.

Read Entire Article