சூரி நடிக்கும் 'மாமன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

3 hours ago 2

சென்னை,

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி. வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை பாகம் 1' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து, 'கருடன், கொட்டுக்காளி' , 'விடுதலை பாகம் 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

இதற்கிடையில் இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'கருடன்' திரைப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார். இது குடும்ப உறவுகள் அது தொடர்பான உணர்வுகளை மையமாகக் கொண்ட படம் என்று சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு 'மாமன்' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மாமன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. அதாவது, இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான ஸ்ரீகுமரன் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோடை காலத்தில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

#Maaman Tamilnadu theatrical distribution secured by #SriKumaranFilms (Rasi Chidambaram), known for bringing us the blockbuster #LubberPandhu Get ready for an unforgettable rural entertainer this SUMMER! @sooriofficial @p_santh @kumarkarupannan @larkstudios1_ #RajKiranpic.twitter.com/3LR12kAInB

— Actor Soori (@sooriofficial) February 12, 2025
Read Entire Article