![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/13/39282427-arrest1.webp)
காந்திநகர்,
குஜராத்தின் அம்ரேலியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் விஷால் சவாலியா. இவர் அதே பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த 12 வயது சிறுவனை வெகு நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து விஷால் தனது மகனை சுமார் நான்கு முதல் ஐந்து முறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்தார். மேலும் அந்த புகாரில், விஷால் கடந்த மாதம் 7ம் தேதி சிறுவனை தனது அறைக்கு அழைத்து ஒரு சார்ஜர் கொடுத்துவிட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என தெரிவித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விஷாலை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியான விஷாலின் போனில் ஓரினச்சேர்க்கை வீடியோக்கள் இருந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.