மதுரை, பிப். 16: மதுரை மாவட்டம் திண்டியூர் கிராமத்தில், ஆதிதிராவிட மக்கள் குடியிருப்பிற்கு பாதையாக பயன்படுத்தி வரும் பகுதியில், அதனை மறித்து திடீரென தடுப்புச்சுவர் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து, விசிக சார்பில் அப்பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. தகலறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
The post சுவரை எதிர்த்து சாலை மறியல் appeared first on Dinakaran.