கோடைகாலம் வந்தாச்சு, பள்ளி, கல்லூரிகள் எல்லாம் லீவு விட்டாச்சு. விடுமுறை நாட்களை குடும்பமாக, நண்பர்களாக என பல ஊர்களுக்கு பயணிக்கும் எண்ணங்களுடன் இந்நேரம் திட்டங்கள் சென்றுகொண்டிருக்கும். சரி சுற்றுலாச் செல்ல என்னென்ன அவசியம், எதெல்லாம் கவனிக்கப்பட வேண்டும்.
மொபைலில் என்னென்ன செயலிகள் இருக்க வேண்டும்?
கூகுள் மேப் (Google Map),
டாய்லெட் செயலி:
அந்தந்த ஊர்களில் சரியாக வேலை செய்யும் பொதுக் கழிப்பிடங்களுக்கான செயலிகளை வைத்துக் கொள்வது நல்லது. பெரும்பாலும் கூகுள் மேப்பிலேயே கழிவறைகள் காட்டினாலும் துல்லியமாக சில நேரங்களில் காட்டுவதில்லை. பெரும்பாலும் ஹைவே பெட்ரோல் பங்க்களில் கழிவறைகள் இருப்பினும் கூட அவைகளின் சுகாதாரம் குறித்த தகவல்கள் கூட கிடைப்பதில்லை. உங்கள் பயணம் இந்தியாவிற்கு வெளியே எனில் அந்தந்த நாடுகளுக்கான செயலிகளைப் பயன்படுத்தலாம். இதே தமிழகத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் எனில் நீங்கள் ‘கக்கூஸ்’ , ‘வேர் ஈஸ் மை டாய்லெட்’, ‘டாய்லெட் நியர் மீ’ உள்ளிட்ட செயலிகளைப் பயன்படுத்தலாம். செலவு மற்றும் நேரப் பட்டியல் செயலிகள்அவசியம். ஸ்ப்லிட்வைஸ் (Splitwise), ட்ரிப்ல்ட் செயலி (Triplt) ஆகிய செயலிகள் இந்த வேலைகளை சரியாகச் செய்யும் . ஹைவே வெதர்(Highway weather) செயலி போகிற இடத்தில் காலநிலை குறித்த அலெர்ட்கள் கொடுக்கும். ஒருவேளை மழை எனில் அதற்கேற்ப நீங்கள் குடை, ரெயின்கோட் என எடுத்துக்கொள்ளலாம்.
நம் பேக்கிங்கில் இருக்க வேண்டிய அவசியத் தேவைகள்!
ஒரு சிறிய கத்தரிக்கோல், கத்தி, டார்ச் லைட், சில அடிப்படை மருத்துவத்துக்கான மருந்துகள் (தலைவலி தைலம், காய்ச்சல் மாத்திரை, வலி ஸ்பிரே), ஸ்டேண்ட் & பீ (Stannd& Pee) அட்டையிலோ அல்லது சிலிகான் கொண்டோ உருவாக்கப்பட்ட ஸ்டேண்ட் & பீ இவை நிச்சயம் பெண்களுக்கு அதீத பயனுள்ள அந்தரங்க பயன்பாடு. சில பெண்களுக்கு பொதுக்கழிப்பிடம், அல்லது இரயில்களில் உள்ள கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதில் அலர்ஜி, அரிப்புகள் வரலாம். அவர்கள் இந்த ஸ்டேண்ட் & பீ பயன்படுத்தலாம். ஒருமுறை படுத்திவிட்டு தூக்கி எரியும் அட்டைகளாக ரூ. 99ல் ஒரு பேக்கில் 10 முதல் சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்தும் வகைகளில் ரூ.250 வரை கூட விற்பனைக்கு உள்ளன. சோப்புகளை துண்டுகளாக வெட்டி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம், அல்லது பாடி வாஷ்களாக பயன்படுத்துவது இன்னும் சிறப்பு. பேஸ்ட்கள் கூட சிறிய மினி சைஸ்களை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. பெரிய பேஸ்கள் சில நேரங்களில் டேமேஜ் ஆனால் மொத்தமும் பைக்குள் கொட்டிவிடும் ஆபத்து உண்டு, மேலும் மறந்தாலும் கூட மினி சைஸ்தானே என விட்டுவிடலாம்.
டீ & காபி பிரியர்களா?
பொதுவாகவே இன்ஸ்டண்ட் காபிப் பொடிகள், அல்லது டிக்காக்ஷன் பாக்கெட்கள் வைத்துக்கொண்டு பாலை மட்டும் வாங்கி கலந்துகொண்டால் வீட்டில் சாப்பிடுவது போன்ற உணர்வு உண்டாகும். முடிந்தவரை வெந்நீர் வாங்கிக் கொண்டு கிரீன் டீ பைகளை பயன்படுத்தலாம். அல்லது டீ- பேக்ஸ்களை பாலில் பயன்படுத்தலாம். மேலும் யூ&த்ரோ டம்ளர்களையோ, அல்லது வீட்டிலிருந்தே டம்ளர்களைக் கொண்டு வருவதும் நல்லது. குறிப்பாக குழந்தைகள் வைத்திருப்பவர்கள் இதனைக் கடைப்பிடிப்பது அவசியம். உடன் பிரெட், ஜாம், பட்டர் இவைகளையும் ஒரு பேக் செய்து வைத்துக்கொள்வது பல நேரங்களில் உதவியாக இருக்கும். போர்டபிள் ஸ்டவ் & கெட்டில்பத்து பேர் ஒன்றாக இணைந்து வேனில், அல்லது காரில் சென்றால் போர்டர்பிள் ஸ்டவ், அல்லது இண்டெக்ஷன் ஸ்டவ்கள் பயன்பாடு பல நேரங்களில் உணவால் உண்டாகும் செலவை கட்டுப்படுத்தும். இப்போதெல்லாம் டிராவல் ஸ்டவ் செட் என விற்பனைக்குள்ளன. அடிக்கடி பயணம் செல்பவர்கள் இதனை பயன்படுத்தலாம். அல்லது கெட்டில் பயன்படுத்தலாம். இதனை எங்கு வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.
ஹோட்டல்கள் சில டிப்ஸ்
*உங்கள் திட்டமே ஹோட்டலில் ஓய்வுதான் எனில் கஸ்டமர்களின் தகவல்களின் அடிப்படையில் ரூம்களை பார்த்துத் தேர்வு செய்யுங்கள். வசதி, கஸ்டமர்கள் சர்வீஸ், கழிவறை, பாத்ரூம் சுகாதாரம், உணவு என அனைத்தும் கவனிப்பது சிறப்பு. மேலும் 4 அதற்கு மேல் ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்ட ஹோட்டல்கள் தேர்வு நல்லது.
* தங்கித், தூங்கி எழுதவுடன் ஜூட் என ஊர் சுற்றும் திட்டமெனில் முடிந்தவரை ஹோட்டல் ரூம்களை பட்ஜெட்டில், மிகக் குறைந்த செலவில் தேர்வு செய்தல் நலம். நாள் முழுக்க பூட்டிக் கிடக்கப் போகும் ரூம்களுக்கு ஏன் செலவு செய்ய வேண்டும்.
* நண்பர்களாக செல்கையில் அந்தந்த ஊரில் இருக்கும் டார்மெண்டரி அல்லது ஹாஸ்டல் ஸ்டைல் ரூம்களைத் தேர்வு செய்தால் சில புது நண்பர்களும் கிடைப்பர், மேலும் அந்தந்த ஊர் சிறப்புகளை அறிந்துகொள்ளவும் உதவியாக இருக்கும்.
*அந்த ஊர் உணவுகளைத் தேடிப் பிடித்து சாப்பிட்டால் செலவு குறைவாக இருக்கும். சில அருமையான சுவை அனுபவமும் கிடைக்கும். குறிப்பாக நம்மூர் வருபவர்கள் எப்படி இட்லி, தோசை என ஏரியா கடைகளில் சப்பிட்டால் வெறும் ரூ.30 முதல் ரூ. 60ல் காலை உணவை முடித்துவிடுவார்களோ அதே பாணிதான்.
* ஹோட்டல் இருக்கும் தூரம் முக்கியம். பொதுவான சுற்றுலா இடங்களுக்கும் நீங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கும் உண்டான தூரம் 5கி.மீருக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் இல்லை எனில் பாதி நேரம் பயணத்திலேயே கழியும்.
– ஷாலினி நியூட்டன்.
The post சுற்றுலா செல்கிறீர்களா? இதோ சில டிப்ஸ் appeared first on Dinakaran.