சுருளி அருவியில் குளிக்க தடை - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

2 hours ago 2

தேனி,

தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், அரிசிபாறை, ஈத்தங்காடு, தூவனம் அணைப்பகுதியிலும் இன்று கனமழை பெய்தது. இதனால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பாதுகாப்பு கருதி, சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். நீர்வரத்து குறைந்த பின்னரே பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் இன்று சுருளி அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.  

Read Entire Article