சுப காரியங்களை செய்ய ஏற்ற திதிகள் என்ன..?

3 months ago 18

மாங்கல்யம்

துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் திருமாங்கல்யம் செய்ய உகந்த நாட்கள் ஆகும்.

திருமணம்

துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் திருமணம் செய்ய உகந்த நாட்கள் ஆகும்.

சாந்தி முகூர்த்தம்

துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் சாந்தி முகூர்த்தத்துக்கு உகந்த நாட்கள் ஆகும்.

சீமந்தம்

திருதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி ஆகிய திதிகள் சீமந்தம் செய்ய உகந்த நாட்கள்.

குழந்தையை தொட்டிலில் போட

துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் குழந்தையை தொட்டிலில் போட உகந்த நாட்கள்.

காது குத்தல்

துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் காது குத்தலுக்கு உகந்த நாட்கள்.

கல்வி கற்க

துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, தசமி, ஏகாதசி ஆகிய திதிகள் கல்வி கற்க தொடங்குவதற்கான வித்யாரம்பம் செய்ய உகந்த நாட்கள்.

கார் வாங்க

சஷ்டி, ஏகாதசி, பவுர்ணமி ஆகிய திதிகள் புதிய கார் வாங்கி முதலில் ஓட்டுவதற்கு உகந்த நாட்கள்.

உழவு செய்தல்

திருதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி ஆகிய திதிகள் உழவு செய்ய உகந்த நாட்கள். 

விதை விதைத்தல்

திருதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி, பவுர்ணமி-2, துவாதசி, சஷ்டி, தசமி ஆகிய திதிகள் விதை விதைத்தலுக்கு உகந்த நாட்கள்.

கதிர் அறுக்க

துவிதியை, திருதியை, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, பவுர்ணமி ஆகிய திதிகள் கதிர் அறுக்க உகந்த நாட்கள்.

தானியத்தை களஞ்சியத்தில் வைத்தல்

துவிதியை, திருதியை, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, பவுர்ணமி ஆகிய திதிகள் தானியத்தை களஞ்சியத்தில் வைக்க உகந்த நாட்கள்.

தானியம் செலவிட

துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, பவுர்ணமி ஆகிய திதிகள் தானியம் செலவிட உகந்த நாட்கள்.

மாடு வாங்குதல், விற்பனை செய்தல்

துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, ஆகிய திதிகள் மாடு வாங்க, கொடுக்க உகந்த நாட்கள்.

பொன் ஆபரணம் அணிவதற்கு

பஞ்சமி, சஷ்டி, தசமி, ஏகாதசி, பவுர்ணமி ஆகிய திதிகள் பொன் ஆபரணம் சூடுவதற்கு உகந்த நாட்கள்.

புத்தாடை உடுத்தல்

துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, பவுர்ணமி ஆகிய திதிகள் புத்தாடை உடுத்தலுக்கு உகந்த நாட்கள்.

கிரகப்பிரவேசம்

துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் கிரகப்பிரவேசம் ஆரம்பத்திற்கு உகந்த நாட்கள்.

நோயாளிகள் மருந்து சாப்பிட

துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் நோயாளிகள் மருந்து சாப்பிட உகந்த நாட்கள்.

பயணம் மேற்கொள்ள

துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி ஆகிய திதிகள் பயணம் செய்ய உகந்த நாட்கள்.

Read Entire Article