சீர்காழி, பிப்.24: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மேலையூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் திருப்பணி கள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்றுமுன்தினம் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை கோமாதா பூஜை, லட்சுமி பூஜை உடன் 4ம் கால பூஜைகள் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மகா பூர்ணா குதி செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ரஜினிகாந்த் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய யாக குடங்களை மேளம், தாளம் முழங்க கோபுரத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் பல்வேறு மங்களப் பொருள்களால் கலசங்கள் புனிதப்படுத்தப்பட்டு, புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த பக்கதர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பின்னர் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தப்பட்டது. இதில் வர்த்தக சங்கத் தலைவர் பூம்புகார் சங்கர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் சம்பத்குமார், சிவக்குமார், குலதெய்வ பக்தர்கள் மற்றும் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.பின்னர் மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பூம்புகார் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
The post சீர்காழி அருகே மேலையூர் திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.