சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியார் அமைப்பினர் கைது: உருட்டு கட்டைகளுடன் குவிந்த நாதகவினர்

2 weeks ago 4

சென்னை நீலாங்கரையில் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியார் அமைப்புகளைச் சேர்ந்த 1,150 பேரை போலீஸார் கைது செய்தனர். இதையொட்டி உருட்டு கட்டைகளுடன் சீமான் வீட்டில் குவிந்த நாதகவினரால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சீமான் 2026-ல் திராவிடத்தை துடைத்து தூர வீசுவேன் என தெரிவித்துள்ளார்.

பெரியார் குறித்து எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து விமர்சித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை பெரியார் கொள்கை சார்ந்த பல்வேறு அமைப்பினர் முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதையொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் 300-க்கும் மேற்பட்ட நாதகவினர் உருட்டு கட்டைகளுடன் நின்றனர். இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட போலீஸாரும் குவிக்கப்பட்டனர்.

Read Entire Article