சீமானுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரகத்தில் புகார்

3 weeks ago 5

சென்னை,

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழை சனியன் என்று சொன்ன பெரியார் எந்த மொழியில் எழுதினார். மொழியையே இழிவாக பேசும் போது அப்புறம் என்ன சமூக மாற்றம். சீர்த்திருத்தம், அரசியல் இருக்கிறது. அடிப்படையே தவறாக உள்ளது. கம்பன், இளங்கோவடிகள், திருவள்ளுவரை எதிரி என்றீர்கள். திருப்பி பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால், எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி.

மதுவுக்கு எதிரான போராட்டத்தில்? ஆயிரம் தென்னை மரங்களை பெரியார் வெட்டி சாய்த்தார். அவரை பகுத்தறிவாளி என்று சொல்கிறார்கள். நான் ஒரு விவசாயி. என்னுடைய தோட்டத்தில் கள் இறக்க அனுமதியில்லை. இவ்வளவு தானே. அதற்காக மரத்தை வெட்டி சாய்த்தால் அது பகுத்தறிவா?. கள் இறக்க என்னுடைய தோட்டத்தில் அனுமதி இல்லை என்று தான் அறிவுள்ளவன் சொல்வான். சமூக நீதிக்கும், பெரியாருக்கும் சம்பந்தம் உண்டா?. சமூக நீதியை போராடி பெற்று தந்ததவர் ஆனைமுத்து தான்.

உடல் இச்சை வந்தால் தாய், மகள், சகோதரியுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் கூறியதாக சீமான் பேசினார். மேலும் இதற்கு ஆதாரம் இருப்பதாகவும் அவர் கூறினார். சீமானின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் கூறியதாக பொய்யான தகவலைக் கூறி அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிய கோரிக்கை வைத்துள்ளனர். இதைபோல தஞ்சாவூர், ஈரோடு காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் சீமான் மீது புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சீமானுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article