சீட்பெல்ட் அணிந்து செல்ல வலியுறுத்தி போக்குவரத்துதுறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

1 week ago 2

பெரம்பலூர், ஜன.31: பெரம்பலூரில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட போக்குவரத்து காவல் துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஜனவரி 1-ம் தேதியில் இருந்து ஜனவரி 31-ம் தேதி வரை ஒரு மாத காலம் சாலை பாதுகாப்பு மாத மானது கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. இதனை யொட்டி சாலைகளில் பாது காப்பாக பயணம் மேற் கொள்வது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின் படி காவல்துறையினர் மற் றும் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் கள் இணைந்து சாலையில் நான்கு சக்கர வாகனங் களை இயக்கும் பொழுது சீட்பெல்ட் அணிந்து இயக்க வேண்டும் என்பது தொடர் பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச் சியில் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரவி, பெரம்பலூர் தேசியநெடுஞ்சாலை போக் குவரத்து இன்ஸ்பெக்டர் கிள்ளிவளவன், பெரம்ப லூர் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜா மணி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post சீட்பெல்ட் அணிந்து செல்ல வலியுறுத்தி போக்குவரத்துதுறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article