சிவகிரியில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்

3 hours ago 1

சிவகிரி,மார்ச் 11: சிவகிரி அருகே செங்குளத்தில் தீவிரமாக நடந்து வரும்பறவைகள் கணக்கெடுப்பு பணிகளை வனச்சரகர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார் சிவகிரி வட்டாரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டும் சிவகிரி, தேவிபட்டணம் பகுதியில் வழிவழிகுளம், முத்தூர் குளம், ராசிங்கப்பேரி குளம், பெரியகுளம், செங்குளம் ஆகிய பல்வேறு இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வனவர் ஜெபித்தர்சிங் ஜாக்சன், வனக்காப்பாளர்கள் கண்ணன், பெருமாள், வன காவலர்கள் ஆனந்த், குரு, வேட்டை தடுப்பு காவலர் சரவணன் உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர். இப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த சிவகிரி வனச்சரகர் செங்கோட்டையன், வழிவழி குளம், முத்தூர்குளம் ஆகியவற்றில் பறவைகள் இனப்பெருக்கம் அதிகரித்து உள்ளதாக தெரிவித்தார்.

The post சிவகிரியில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article