காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சரை கண்டித்து கொடும்பாவி ஏரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக அரசுக்கு தரவேண்டிய நிதியை தராமல் கால தாமதம் செய்வது, அவதூறாக பேசுவது, இந்தியை ஏற்றால் மட்டும் தான் கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து கொடும்பாவி எரிப்பு போராட்டம் நேற்று காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகில் நடைபெற்றது. மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் சந்துரு, திலகர், வெங்கடேசன், மாநகர அவைத்தலைவர் கே.எ.செங்குட்டுவன், பொருளாளர் சுப்பராயன், நிர்வாகிகள் சம்பத், குமரேசன், சுரேஷ், கமலக்கண்ணன், நிர்மலா, சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post ஒன்றிய கல்வித்துறை அமைச்சரை கண்டித்து கொடும்பாவி ஏரிப்பு போராட்டம் appeared first on Dinakaran.