சிவகங்கைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் சிலை அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்!!

3 hours ago 1

சிவகங்கை : 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொள்வதற்காக சிவகங்கைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சிவகங்கை மாவட்டத்தில் இன்றும் நாளையும் கள ஆய்வு மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காரைக்குடியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அழகப்பா பல்கலை.யில் புதிதாக அமையப்பெற்ற அய்யன் திருவள்ளுவர் மார்பளவு சிலையையும் முதல்வர் திறந்து வைக்க உள்ளார். சிவகங்கையில் நாளை பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் 35 ஆயிரம் பேருக்கு நடத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.

சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் சிலை அமைக்க முதல்வர் நாளை அடிக்கல் நாட்டுகிறார். காரைக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கவிஞர் முடியரசனுக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்ட உள்ளார் முதல்வர். பெரியார், அண்ணா, பாரதிதாசன், கலைஞரால் போற்றப்பட்டவர் கவிஞர் முடியரசன். ரூ.50 லட்சம் செலவில் நிறுவப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் சிலையையும் முதல்வர் திறந்து வைக்கிறார். மருது பாண்டியர்களின் உற்ற நண்பராக விளங்கியவர் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சிவகங்கைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் சிலை அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்!! appeared first on Dinakaran.

Read Entire Article