சிவகங்கை அருகே புதிய தார் சாலை அமைக்க கோரிக்கை

2 months ago 8

சிவகங்கை, டிச.3: சிவகங்கை அருகே உள்ள மேலப்பூங்குடி கிராமத்தில் சுமார் 800 குடும்பத்திற்கும் மேல் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் முக்கிய சாலையாக மேலப்பூங்குடி திருமலை செல்லும் சாலை உள்ளது. சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலை, கடந்த 2016ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்த சாலை செல்லும் பகுதியில் அங்கன்வாடி மையம், கிராம நூலகங்கள் உள்ளன. இந்நிலையில் தற்போது பெய்த மழையால் சாலை முழுவதும் சேதமடைந்து சேறும் சகதியாக மாறி உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், டூவிலர்களில் செல்பவர்கள், பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். ஆகையால் மேபப்பூங்குடி திருமலை செல்லும் பகுதியில் உடனடியாக புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சிவகங்கை அருகே புதிய தார் சாலை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article