புழல்: தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்பு விளையாட்டை பாதுகாக்கவும், தமிழர்களின் வீர கலையான சிலம்பத்தை உலகறியச் செய்யவும், மாநில அளவிலான சிலம்ப போட்டி புழல் கால்பந்து விளையாட்டு திடலில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சிலம்பம் ஆசான் ஜெ.நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். பாலாஜி, பரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக பகுஜன் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், மாநகராட்சி கவுன்சிலர்கள் ராஜன் பரணபாஸ், சேட்டு ஆகியோர் சிலம்பாட்ட போட்டியை தொடங்கி வைத்தனர். இப்போட்டியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 25க்கும் மேற்பட்ட குழுவினர் கலந்துகொண்டு விளையாடினர். போட்டியில் முதல் இடத்தை குமிடிப்பூண்டி அணியும், இரண்டாவது இடத்தை செங்குன்றம் அணியும், மூன்றாவது இடத்தை திருவேற்காடு அணியும் பெற்றனர். முதல் மூன்று இடங்களை பிடித்த சிலம்பாட்ட குழுவினர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கி சிறப்பித்தனர்.
The post சிலம்ப போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு appeared first on Dinakaran.