விருதுநகர், பிப்.12: அரிசி ரேசன் கார்டுகளை பிற வகை கார்டுகளாக மாற்ற 15ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அரிசி கடத்தலை தடுக்கும் வகையிலும் அதிக புழக்கத்தை குறைக்கும் நோக்கிலும் அரிசி ரேசன்கார்டுகளை பிற வகைகளாக மாற்ற விரும்பும் கார்டுதாரர்கள் வகை மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம் பிப்.15ல் 10 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.
இதில் முன்னுரிமை ரேசன் கார்டுகளான பி.ஹெச்.ஹெச், அந்தியோதயா அன்ன யோஜனா ரேசன்கார்டுகள்(ஏஏஓய்), முன்னுரிமையற்ற அரிசி கார்டுகள் ஆகியவற்றை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்கள் கொடுத்து முன்னுரிமையற்ற சர்க்கரை ரேசன்கார்டுகள் அல்லது எப்பொருளும் வேண்டா ரேசன் கார்டுகளாக மாற்றலாம். விருப்பமுள்ள ரேசன்கார்டுதாரர்கள் முகாமினை பயன்படுத்தி பொதுவிநியோக திட்ட பயன்பாடு சரியான முறையில் தேவைப்படும் மக்களுக்கு சென்றடைய முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
The post அரிசி ரேஷன் கார்டுகளை சீனி கார்டாக மாற்றலாம் appeared first on Dinakaran.