பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர் சிவகாசியில் தைப்பூச தேரோட்டம்

3 hours ago 1

சிவகாசி, பிப்.12: சிவகாசி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. சிவகாசி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார்.

நேற்று தைப்பூச திருவிழாவையொட்டி, கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் முருகன் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர், கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

The post பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர் சிவகாசியில் தைப்பூச தேரோட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article