
திருவள்ளூர்,
'அயோத்தி, கருடன், நந்தன்' உள்ளிட்ட வெற்றிப்படங்களையடுத்து சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் 'டூரிஸ்ட் பேமலி'. இந்த படத்தை 'குட் நைட்' படத்தினை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. அபிஷன் ஜீவிந்த் இயக்கும் இந்தப் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், நடிகர் சசிகுமார் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில் 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்பதற்காக சாமி தரிசனம் செய்துள்ளார். சாமி தரிசனம் செய்து முடித்த பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.