ஈரோடு - ஒடிசா சிறப்பு ரெயிலில் கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைப்பு

4 hours ago 3

ஈரோடு,

ஒடிசா சம்பல்பூர்-ஈரோடு செல்லும் சிறப்பு ரெயிலில் ஒரு ஏசி மூன்று அடுக்கு பெட்டி மற்றும் ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டியுடன் கூடுதலாக வழங்கப்படும் என ரெயில்வே தெரிவித்துள்ளது.

சம்பல்பூரில் இருந்து ஈரோட்டிற்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 08311) வருகிற மே மாதத்தில் 07, 14, 21, 28, ஜூன் மாதத்தில் 04, 11, 18, மற்றும் 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் சம்பல்பூரில் இருந்து (புதன் கிழமை) காலை 11.35 மணியளவில் புறப்படும்.

மறுமார்க்கத்தில், ஈரோட்டில் இருந்து சம்பல்பூருக்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 08312) வருகிற மே மாதத்தில் 09, 16, 23, 30, ஜூன் மாதத்தில் 6, 13, 20, மற்றும் 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து (வெள்ளிக்கிழமை) மதியம் 2.45 மணியளவில் புறப்படும்.

பெட்டி அமைப்பு 1- ஏசி மூன்று அடுக்கு பெட்டி, 4- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 10- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 3- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 1- பேன்ட்ரி கார் மற்றும் 2- இரண்டாம் வகுப்பு பெட்டி ஆகும்.

Read Entire Article