சீர்காழி, ஜன.25: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கடைவீதி சபாநாயக முதலியார் இந்து பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மாறுவேட போட்டிகள் நடைபெற்றது. விழாவில் மாணவ- மாணவிகள் பல்வேறு தேச தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், செல்போன்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்தும், இயற்கை விவசாயம் குறித்தும் , பல்வேறு தெய்வங்கள், விழிப்புணர்வுகளை ஏற்படுத்து வகையில் வேடமடைந்து வந்து தேச தலைவர்களை போல பேசினார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர் தங்கவேல் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர். இதில் பள்ளி முதல்வர்கள் தங்கத்துரை, மாதவன், தமிழரசன், கிரிஜாபாய், உஷா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
The post சிறுவர், சிறுமிகளுக்கான மாறுவேட போட்டி appeared first on Dinakaran.