சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2-வது கணவர் கைது

4 hours ago 3

தஞ்சை,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பகுதியை சேர்ந்தவர் 32 வயதான பெண். இவருக்கு 16 வயதான மகள் உள்ளார். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அந்த பெண், திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த 29 வயதான வாலிபரை காதலித்து 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது கணவர் மூலம் அந்த பெண்ணுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் அந்த வாலிபர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மகள்களை தாக்கி அவர்களிடம் தவறாக நடந்து வந்துள்ளார். கணவரின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவருடன் கோபித்துக்கொண்டு தனது 4 மகள்களுடன் அந்த பெண் அந்த பகுதியில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார். அந்த வீட்டுக்கும் வந்த அந்த வாலிபர், தனது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் தனது 2-வது கணவர் மீது திருவிடைமருதூர் அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் இரண்டாவது கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Read Entire Article