குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை!

8 hours ago 1

தென்மேற்கு பருவமழை பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. கர்நாடகாவின் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக அங்கு பெரும்பாலான இடங்களில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article