
சென்னை,
நடிகை ஜெனிலியாவின் திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
தமிழில் 'பாய்ஸ்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்', 'உத்தமபுத்திரன்', 'வேலாயுதம்' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஜெனிலியா. இந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து உச்ச நடிகையாக உயர்ந்தார்.
சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து மணந்தார். 2 குழந்தைகளையும் பெற்றெடுத்தார். பின்னர் சினிமாவில் இருந்து சிறிது இடைவெளி எடுத்துக்கொண்ட அவர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.
அதன்படி, பாலிவுட்டில் அமீர்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் 'சித்தாரே ஜமீன் பர்' படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கி இருக்கும் இப்படம் ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாக உள்ளது.
மறுபுறம், ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள 'ஜூனியர்' படத்திலும் ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ராதா கிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ஜூலை 18-ம் தேதி வெளியாக உள்ளது.