சிறுமிக்கு பாலியல் தொல்லை: டீ மாஸ்டர் உள்பட 3 பேர் கைது

6 months ago 29

திருச்சி,

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் குமார் (வயது 34). இவர் திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த வேலம்பட்டி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவினாசிபாளையம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சிறுமிக்கு டீ மாஸ்டர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் டீ மாஸ்டர் குமாரை கைது செய்தனர். இதே போல் வடக்கு அவினாசிபாளையம் பகுதியை சேர்ந்த மகேஷ் குமார் (28) மற்றும் சூலூர் பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி (19) ஆகியோரும் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Read Entire Article