வளசரவாக்கம்: சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (50). இவர் இதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த 16 வயது சிறுமிக்கு, பாலசுப்பிரமணியன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் பயந்துபோன சிறுமி, இதுபற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இதுபற்றி அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், பாலசுப்பிரமணி மீது போக்சோ வழக்குபதிவு செய்து, அவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
The post சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கடை உரிமையாளர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.